Categories
அரசியல் மாநில செய்திகள்

டெம்ப்ரவரி பதவியில் புரூடா EPS.. விமர்சிக்க தகுதி இருக்கா? CM ஸ்டாலின் விளாசல்..!

திமுக அமைச்சர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், தமிழ்நாடு நம்பர் 1 என்று உருவாக்க வேண்டும் என்கின்ற நிலையில், எங்களது பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்த சந்தடி சாக்கில் ஒரு காமெடி, நீங்க எல்லாம் சமூக வலைதளங்களில் பத்திரிகையில் பார்த்திருப்பீர்கள். திமுகவில் எம்எல்ஏக்கள் என்னோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறார்.

அவரிடம் இருக்கின்ற எம்எல்ஏக்களே அவரிடம் பேசுவதில்லை, உங்களிடம் எம்.எல்.ஏ உங்களிடம் பேசுவதில்லை. எங்கள் எம்எல்ஏ வந்து உங்களிடம் பேசுகிறார்கள் என்று ஒரு புரூடா விட்டு கொண்டிருக்கிறார்கள்.அம்மையார் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு நடைபெற்று இருக்கக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி, சட்டமன்ற தேர்தலிலும் தோல்வி, உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி.

இன்றைக்கு அந்த கட்சி, அதிமுக கட்சி பிளவுபட்டு இருக்கிறது, ஓபிஎஸ் – இபிஎஸ் என்று இரண்டு அணிகளாக பிளவுபட்டு இருக்கிறது. இப்போது அவர் இருக்கிற பதவியே டெம்ப்ரவரி  பதவி தான். இந்த டெம்ப்ரவரி பதவியை வைத்துக்கொண்டு இன்னொரு கட்சியை விமர்சிக்க அவருக்கு தகுதி இருக்கிறதா? நானும் இந்த நாட்டில் உயிரோடு இருக்கிறேன் என்று காட்டிக்கொள்வதற்காக தான் இந்த காமெடி கதைகள் எல்லாம் விட்டுக் கொண்டிருக்கிறார்.

நாம் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம், என்னை பொறுத்த வரைக்கும் நான் குறிக்கோள் வைத்திருக்கிறேன். நல்லதை செய்வதற்கே இப்போ  நேரமில்லை, ஆக இப்படி கெட்டதை, பொய்யை, திட்டமிட்டு செய்யக்கூடிய பொய் பிரச்சாரத்தை பற்றி நான் கவலைப்படுவதில்லை, அதற்கெல்லாம் கவலைப்படுபவருக்கு நேரமே இல்லை. மக்கள் நமக்கு நன்மை செய்ய வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள், அந்த நன்மையை மட்டும் செய்வோம், மக்களுக்காக வாழ்வோம் என தெரிவித்தார்.

Categories

Tech |