Categories
சினிமா தமிழ் சினிமா

“PS-1” இது ஒரு தெலுங்கு படம்…. கண்டிப்பாக ஆதரவு கொடுங்க…. நடிகை சுகாசினியின் ஸ்பீச்சால் ரசிகர்கள் ஷாக்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஜெயராமன், திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஹைதராபாத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் பட குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவின்போது நடிகர் சுகாசினி பேசியது தான் தற்போது பலராலும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அவர் ஹைதராபாத் படவிழாவில் கூறியதாவது, பொன்னியின் செல்வன் உங்க படம். இந்த படத்தை நீங்கள் ஆதரிக்க வேண்டும். இது ஒரு உண்மையான தமிழ் கதை. இருப்பினும் படத்தின் சூட்டிங் பெரும்பாலும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தான் நடைபெற்றது. தமிழ்நாட்டில் பொள்ளாச்சி மற்றும் பாண்டிச்சேரி உட்பட சில பகுதிகளில் 10 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் நடந்தது. எனவே இது உங்க திரைப்படம் என்று கூறி இருக்கிறார். மேலும் தெலுங்கு சினிமாவில் நடிகை சுகாசினி ஹைதராபாத்தில் வைத்து இது உங்க திரைப்படம் என்று கூறியது தான் ரசிகர்கள் தற்போது ட்ரோல் செய்து வருகின்றனர்.

Categories

Tech |