தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக இயக்குகிறார். இந்த படத்தின் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, ரகுமான், விக்ரம் பிரபு, சரத்குமார், விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், சோபிதா துலிபாலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பட குழுவினர் தற்போது ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் நடிகர் கார்த்தி செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார்.
அவர் கூறியதாவது, பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் போது தான் நான் கல்கி எழுதிய புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். படப்பிடிப்பின் போது ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் பார்க்க பார்க்க மிகவும் அழகாக இருந்தது. அந்த கதையில் இருக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பார்க்கும்போது எனக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. நீங்களும் அப்படித்தான் படத்தை பார்க்க போகிறீர்கள். எனவே படம் எப்படி பண்ணி இருக்காங்கன்னு மார்க் போட வராதீங்க. இது 60 வருட கனவு. இதை அனுபவியுங்கள். இந்த தலைமுறைக்கு கிடைத்த அனுபவம் என்றார்.