Categories
சினிமா தமிழ் சினிமா

PS-1…. “ஐஸ்வர்யா ராய்-க்கு பதிலாக முதலில் இவங்கதான் நடிக்க இருந்தாங்களாம்”…. ஆனா இப்ப நடிகைக்கு மார்க்கெட் இல்ல….!!!!!!

பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு பதிலாக இவங்க தான் முதலில் நடிக்க இருந்தார்களாம்.

மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இத்திரைப்படம் தற்போது வசூலில் சக்கப்போடு போட்டு வருகின்றது.

இத்திரைப்படத்தில் முக்கிய ஒரு கதாபாத்திரத்தில் தான் ஐஸ்வர்யா ராய் நடித்த நந்தினி கதாபாத்திரமாகும். இந்த கதாபாத்திரத்தில் முதன்முதலில் நடிக்க மணிரத்னம் நடிகை அனுஷ்காவைத் தான் தேர்ந்தெடுத்தாராம். சென்ற 2011 ஆம் வருடம் பொன்னியின் செல்வன் தொடங்கிய போது நந்தினி கதாபாத்திரத்தில் அனுஷ்காவை நடிக்க வைக்க மணிரத்தினம் முடிவெடுத்து இருக்கின்றார். ஆனால் அப்போது படம் ட்ராப் ஆகிவிட்டது. தற்போது அனுஷ்காவிற்கு பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா ராய் நடித்த நந்தினி கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த மார்க்கெட் இழந்த நடிகை.. | Anushka Is First Choice For Ponniyin Selvan

Categories

Tech |