Categories
சினிமா தமிழ் சினிமா

“PS-1” சீனியர் நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ஜெயம் ரவி…. ரொம்ப அதிகமாமே….!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த ஒரு ஹீரோவுக்கு தான் அதிக சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக எடுத்துள்ளார். இதில் முதல் பாகம் தயாராகி வருகிற  செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பார்த்திபன், பிரபு, நிழல்கள் ரவி, சோபிதா துலிபாலா, விக்ரம் பிரபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் படத்தின் புதிய அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில், படத்தில் யார் அதிக சம்பளம் வாங்கினார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் ஜெயம் ரவிக்கு தான் அதிக சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஏனெனில் நடிகர் ஜெயம் ரவிதான் பொன்னியின் செல்வன் படத்திற்காக அதிக கால்ஷீட் கொடுத்தாராம். இதன் காரணமாகத்தான் ஜெயம் ரவிக்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சீனியர் நடிகர்கள் பலர் இருந்தும் ஜெயம் ரவிக்கு அதிக சம்பளம் வாங்கப்பட்டதாக கூறிய தகவலை நம்ப முடியவில்லையே என ரசிகர்கள் இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Categories

Tech |