தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, சரத்குமார், ஜெயராமன், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பட குழுவினர் தற்போது ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்திற்காண டிக்கெட் முன்பதிவுகள் இன்று தொடங்கப்பட்டுள்ள நிலையில், மதியத்திற்கு முன்பாக 78,000 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் 1.5 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. மேலும் படம் ரிலீசுக்கு முன்பாகவே டிக்கெட் முன்பதிவின் மூலம் 10 கோடி ரூபாய் வருமானம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.