தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் நடிகர் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ரகுமான், சரத்குமார், விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இயக்குனர் மணிரத்தினம் கடந்த 1990-ம் ஆண்டுகளிலேயே பொன்னியின் செல்வன் படத்தை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளார். அப்போது நடிகர் கமல்ஹாசனை அருள்மொழி வர்மனாகவும், நடிகர் ரஜினிகாந்தை வந்திய தேவனாகவும் நடிக்க வைப்பதற்கு திட்டமிட்டுள்ளார். இதேபோன்று நந்தினி கதாபாத்திரத்தில் மணிரத்தினம் முதலில் பாலிவுட் நடிகை ரேகாவை நடிக்க வைப்பதற்கு திட்டமிட்டுள்ளார். அதாவது நந்தினி கதாபாத்திரத்திற்கு ரேகாவை தவிர வேறு யாரும் மணிரத்தினம் நினைவில் வரவில்லையாம். மேலும் நடிகர் ரஜினிகாந்திடம் பொன்னியின் செல்வன் கதையை மணிரத்தினம் கூறிய போது குந்தவை கதாபாத்திரத்திற்கு ஸ்ரீதேவியை யோசித்துப் பார்த்ததாக ரஜினிகாந்தே கூறியுள்ளார்.