தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வரும் த்ரிஷா அண்மைகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளிவந்த பின் த்ரிஷாவின் நட்சத்திர அந்தஸ்து உச்சத்திற்கு சென்றிருக்கிறது. அந்த திரைப்படத்தில் த்ரிஷா ஏற்று நடித்த குந்தவை கதாபாத்திரமும், இளவரசி தோற்றமும் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்தது. இப்போது த்ரிஷாவுக்கு படவாய்ப்புகளானது குவிகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கவும் அவரிடம் பேசி வருகிறார்கள். இதுபோன்று விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் படத்திலும் நாயகியாக நடிக்க த்ரிஷா பெயர் அடிபடுகிறதாம். இந்த நிலையில் சம்பளத்தை த்ரிஷா சம்பளத்தை உயர்த்தி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இதுவரையிலும் ரூ.1 கோடியே 50 லட்சம் வரையிலும் வாங்கி வந்த அவர், தற்போது ரூ.3கோடி சம்பளம் கேட்பதாகவும் தகவல் பரவியுள்ளது.