தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும், நடிகராகவும் இருப்பவர் பார்த்திபன். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் நல்ல வெற்றியடைந்தது.
இதனைத்தொடர்ந்து இவர் இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ”இரவின் நிழல்”. திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் பலரின் பாராட்டுகளை பெற்றது. இந்த படத்தில் ரோபோ சங்கர், வரலட்சுமி சரத்குமார், சகாய பிரகிடா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்நிலையில், இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து பார்த்திபன் தனது சமூக வலைதள பக்கத்தில், ”அமேசானில் இன்று முதல்’பொன்னியின் செல்வன்’எனவே,வரும் வாரம் வருமாம் ‘இரவின் நிழல்’-செய்தி பெருமழையில் தேங்கிவிடுகிறது சிறு தொழில் செய்வோரின் வியாபாரம். அன்றைய உணவிற்கு அன்றன்று உழைக்கும் மக்கள் நிலையே கவலைக்கிடம்.இடர் காலங்களில் ஒருவருக்கொருவர் கடுகளவு உதவுவதும் பெருங்கொடை” என பதிவிட்டுள்ளார்.
அமேசானில் இன்று முதல்’பொன்னியின் செல்வன்’எனவே,வரும் வாரம் வருமாம்
‘இரவின் நிழல்’-செய்தி
பெருமழையில் தேங்கிவிடுகிறது சிறு தொழில் செய்வோரின் வியாபாரம்.
அன்றைய உணவிற்கு அன்றன்று உழைக்கும் மக்கள் நிலையே கவலைக்கிடம்.இடர் காலங்களில் ஒருவருக்கொருவர் கடுகளவு உதவுவதும் பெருங்கொடை!conti— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 4, 2022