Categories
சினிமா தமிழ் சினிமா

“PS-1″… புலிக்கொடி ஏன் இடம்பெறவில்லை…. 2-ம் பாகத்தில் அப்படி மட்டும் இருந்தால்…. மணிரத்தினத்திற்கு கௌதமன் கடும் எச்சரிக்கை….!!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்களும் பொன்னியின் செல்வன் நாவலை இயக்கிய மணிரத்தினம் படமாக்கிய விதத்தை பாராட்டி வருகின்றனர். தமிழர்களிடம் மட்டும் இன்றி உலகம் முழுவதும் வரவேற்பு பெற்று உள்ளது பொன்னின் செல்வன். வசூலில் படையை கிளப்பி வருகிறது. அதே நேரத்தில் பொன்னியின் செல்வன் படத்திற்கு சர்ச்சைகளும் கிளம்பி வருகிறது.

இந்நிலையில்  கனவே கலையாதே, மகிழ்ச்சி ஆகிய படங்களை இயக்கிய கவுதமன் இயக்குனர் மணிரத்தினத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.  இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய அவர், தமிழ் நிலத்தை சோழப் பேரரசு மட்டுமே 350 ஆண்டுகளாக ஆண்ட வரலாறு உண்டு. இந்த திரைப்படத்தை தமிழனாக இருந்து சொல்லவில்லை என்றாலும் வரலாற்றை சொல்லி இருக்க வேண்டும். சோழர்களின் சின்னமான புலி கொடியை ஒரு இடத்தில் கூட காட்டவில்லை என்றால் அப்படி என்ன வரலாறு ஆய்வு செய்து உள்ளார்கள் என்று கேள்வி எழுப்பினார். அதனை தொடர்ந்து ஜெயமோகன் சோழர்கள் தெலுங்கர்கள் என குறிப்பிடுகிறார் என்று கூறிய கவுதமன் படைப்பாளிகள் உண்மையை பேச வேண்டாம், ஆளுமையோடு படைப்பை உருவாக்க வேண்டும். இதுபோன்ற வரலாற்றை மடைமாற்றும் செயல் இரண்டாம் பாகத்தில் இடம் பெற்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

Categories

Tech |