பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகையை நடிக்க வைக்க இருந்தாராம் மணிரத்தினம்.
மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் இத்திரைப்படத்திற்காக பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இப்படத்தில் நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இத்திரைப்படத்தின் பிரமோஷனுக்காக படக்குழுவினர் பல்வேறு இடங்களுக்கு சுற்று பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்கள். இந்த நிலையில் நந்தினி பற்றி பேசப்படுகின்றது. நந்தினி கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை 90-களில் எடுக்க திட்டமிட்ட மணிரத்தினம் கமல், ரஜினி-யை வைத்து படம் பண்ண திட்டமிட்டு இருந்தாராம். மேலும் பாலிவுட் நடிகையான ரேகா கணேசனை தான் நந்தினியாக நடிக்க வைக்க இருந்தாராம். அப்பொழுது படம் எடுக்க முடியாமல் போனதாக தற்பொழுது மணிரத்னம் கூறியுள்ளார்.