சென்னையில் பிஎஸ்பிபி பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பில் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஷால் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
அதில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை தூக்கில் தொங்கவிட வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் ஒருமுறைகூட மன்னிப்பு கேட்காத பிஎஸ்பிபி பள்ளியை மூட வேண்டும் என்று ஆவேசமாக சூளுரைத்தார். மேலும் உடனடியாக பள்ளியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.