சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் படித்த மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அதுமட்டுமன்றி ஆசிரியருக்கு ஜூன் 8-ஆம் தேதி வரை சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்ற நீதிபதி நேற்று தீர்ப்பளித்துள்ளார்.
இந்நிலையில் Psbb பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது ஆகி நீதிமன்றத்தால் விசாரணைக்காக சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், இந்த விவகாரம் அரசியல் ஆதாயத்திற்காக ஜாதிப் பிரச்சனையாக மாற்றப்படுவதால் கமல் அறிக்கை வெளியிட்டுள்ளதாக சர்ச்சை ஆகியுள்ளது. கமல் அன்று சூரப்பாவுக்கு ஆதரவு, இன்று psbb பள்ளிக்கு ஆதரவு என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள்.