சென்னை கே.கே நகரில் நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் மற்றும் மதுவந்திக்கு சொந்தமான #PSBB பள்ளி ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக பலரும் சமூகவலைதளங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
மேலும் அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சீமான், கேகே நகரில் உள்ள பள்ளியில் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை தருகிறது. மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து நெறிப்படுத்த வேண்டிய ஒரு ஆசிரியரே இழிவாக அருவறுக்கத்தக்க வகையில் நடந்து கொண்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று சீமான் மீது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.