Categories
மாநில செய்திகள்

PSBB பள்ளி ஆசிரியர் பாலியல் தொந்தரவு வழக்கு… தாளாளர் ஆஜராக உத்தரவு…!!

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது சம்பந்தமாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஆசிரியருக்கு ஜூன் 8-ஆம் தேதி வரை சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். இதை அடுத்து பத்மா சேஷாத்ரி பள்ளி வழக்கில் பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர் வருகிற 31-ஆம் தேதி விசு நேரில் ஆஜராகுமாறு சென்னை மாவட்ட குழந்தைகள் நல குழு சம்மன் அனுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட பத்மா சேஷாத்ரி பள்ளி மாணவிகள் குறித்த அறிக்கை அசோக் நகர் மகளிர் காவல் நிலையம் மூலம் குழந்தைகள் நல குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

Categories

Tech |