அபுதாபியில் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL )இறுதிப் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது .
இந்த 2021 ம் ஆண்டு சீசனுக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டி கடந்த பிப்ரவரி – மார்ச் மாதங்களில் நடைபெற்று வந்தது . இந்நிலையில் போட்டியில் இடம்பெற்ற வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த 9ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் நடைபெற்று வந்தது. இந்த இறுதிப்போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் – பெஷாவர் சல்மி அணிகள் மோதிக் கொண்டன. இதில் டாஸ் வென்ற பெஷாவர் அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் சுல்தான் அணி பேட்டிங்கில் களமிறங்கியது. இதில் அதிகபட்சமாக ஷோயப் மக்சூத் 60 ரன்கள், ரசோவ் 50 ரன்களும் எடுத்தனர்.
இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு முல்தான் அணி 206 ரன்களை எடுத்திருந்தது. இதையடுத்து பெஷாவர் அணி 207 ரன்களை வெற்றி இலக்காக கொண் டு களமிறங்கியது. ஆனால் 20 ஓவர் முடிவில் பெஷாவர் அணி 159 ரன்களை எடுத்து தோல்வியை சந்தித்தது. இதனால் 47 ரன்கள் வித்தியாசத்தில் அணி பெஷாவர் அணியை வீழ்த்தி முல்தான் அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் முதல் முறையாக முல்தான் சுல்தான் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.