துப்பறிவாளன் படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கியுள்ள படம் ‘சைக்கோ’. உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன், சிங்கம்புலி, ராம், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுத்தம் செய், பிசாசு, துப்பறிவாளன் பட வரிசையில் இந்தமுறை ‘சைக்கோ’ திரில்லர் கதைக்களத்தில் மிஷ்கின் புதிய படைப்பை உருவாக்கியிருக்கிறார்.
இப்படத்தில் உதயநிதி கண்பார்வையற்றவராக நடித்துள்ளார். டபுள் மீனிங் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். தன்விர் மிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜனவரி 24-ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இதனையடுத்து இப்படத்தை தெலுங்கில் பிப்ரவரி 21-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் ஆரம்பகாலத்தில் காமெடி படங்களில் மட்டுமே நடித்துவந்த நிலையில், சமீபகாலமாக நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்வுசெய்து நடித்துவருகிறார். அதே போல் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் திரைப்படமும் தெலுங்கில் வெளியானது கூடுதல் தகவல்.