எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்புக்கான சீட்டுகள் நிரம்பிய நிலையில், பி.டி.எஸ்மருத்துவ படிப்புக்கான 648 சீட்டுகள் மீதமுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் எம்பிபிஎஸ் இடங்கள் அனைத்தும் நிரம்பிய நிலையில்,பி.டி.எஸ் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.2019 -2020 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் கடந்த எட்டாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இருந்த 3968 எம்.பி.பி.எஸ் சீட்களும் நிரம்பிவிட்ட நிலையில் பல் மருத்துவ படிப்புகென்று ஒரு அரசு மருத்துவ கல்லூரி மற்றும் 18 தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 1070 சீட்டுகள் ஒதுக்கி இருந்தன.அதில் அரசு மருத்துவ கல்லூரிகென்று ஒதுக்கப்பட்ட 100 சீட்டுகளும் நிரப்பப்பட்ட நிலையில் இதுவரை 510 சீட்டுகள் நிரம்பியுள்ளது.இதையடுத்து தனியார் கல்லூரிகளில் உள்ள 690 பி.டி.எஸ் சீட்களில் 648 சீட்டுகள் மீதமுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.