FAU-G கேம் இந்தியாவில் இந்த தேதியில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியா கேம் விரும்பிகளால் மிகவும் எதிர்பார்க்கப்படுவது FAU-G கேம் அல்லது Fearless And United Guards எனப்படும் மொபைல் கேம். இந்த கேம் எப்போது அறிமுகமாகும் என்கின்ற தகவலை கேமின் டெவலப்பர் ஆன nCore அறிவித்துள்ளது. விஷால் கோண்டல் மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஆகியோர் தங்களது ட்விட்டர் அக்கவுண்ட் வழியாக அறிமுகத்தை அறிவித்தனர். FAU-G பிரபல பப்ஜி கேம் இன் போட்டியாளர் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த காரணத்திற்காக இதன் மீதான எதிர்பார்ப்பு அறிவு அதிகரித்துக் கொண்டே உள்ளது.
அதே சமயம் அறிமுகம் தேதி தாமதமாகிக் கொண்டே போவதால் கேம் பிரியர்கள் பலத்த எதிர்பார்ப்பில் காத்துள்ளனர். 2020 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்சன் கேம்களில் ஒன்று. இது 2021ல் தான் அறிமுகமாகும் என தெரியாமல் போனது. நீண்ட காத்திருப்புக்கு பிறகு ஜனவரி 26 ஆம் தேதி இந்த கேம் அறிமுகமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் விளையாட விரும்பினால் முன்பதிவு செயயும் வகையில் கூகுள் பிளே ஸ்டோரில் இந்த கேமை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதில் கதாபாத்திரங்கள் FAU-G கேம் கமெண்டர் என்று அழைக்கப்படுவார்கள்.
இது ஆபத்தான பிரதேசத்தில் ரோந்து செல்லும் இந்திய வீரர்களின் உயரடுக்கு குழுவாகும். பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருடன் இணைந்து பெங்களூரை சேர்ந்த என்கோரட் கேம்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் டீசர் அக்டோபர் 25 அன்று நேரலைக்கு வந்தது. வெளியீடு அடுத்த மாதத்தில் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அது நடக்கவில்லை. இந்நிலையில் ஜனவரி 26 ஆம் தேதி நிச்சயம் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.