இந்தியாவில் PUBG உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பாக லடாக் எல்லையில் இந்திய ராணுவ வீரர்களுக்கும், சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே எல்லைப் பிரச்சனை தொடர்பாக மோதல் ஏற்பட்டதில், இந்திய ராணுவ வீரர்கள் சிலர் வீரமரணம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து சீனாவுக்கு எதிராக இந்தியாவில் பல கட்டப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
இதைத்தொடர்ந்து இந்தியாவில் டிக் டாக் உள்ளிட்ட 59 மொபைல் செயலிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் எல்லை பகுதிகளில் சீன ராணுவத்தினரால் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில், தற்போது pubg, cam card, baidu, cut cut, voov, tencent, weiyun, rise of kingdoms உட்பட 118 செயலிகளை மத்திய அரசு தடை விதித்துள்ளது. பப்ஜி விளையாட்டில் ஈடுபடுபவர்கள் பலர் மன அழுத்தத்திற்கு ஆளாவதாகவும், பலர் உயிரிழந்ததாகவும் வந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தற்போது இந்த தடை விதிக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.