இன்று மாலை 4 மற்றும் 6 மணியளவில் pubg போட்டி நடத்தப்பட இருப்பதாக தனியார் இணையதளம் ஒன்று அறிவித்திருக்கிறது.
தற்பொழுது இந்தியாவைப் பொருத்தவரை போதைக்கு அடிமையானவர்களை விட PUBG விளையாட்டிற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இந்த விளையாட்டால் அவ்வபோது சில விபரீதங்கள் ஏற்படுகின்றன. இந்த விளையாட்டை விளையாடும் பொழுது இளைஞர்கள் தங்களை மறந்து அதில் மூழ்கி விடுகின்றனர்.
இந்நிலையில் பப்ஜி கேம் விளையாடுவோருக்கு பயனாக இருக்கும் வகையில், கேமிங்மோங் என்ற இணையதள குழு நாள்தோறும் பப்ஜி விளையாடுவதற்கான போட்டியை நடத்துகிறது. அதில் முதல் 20 இடங்களை பெறுவோருக்கு சன்மானம் வழங்கப்படுகிறது. அதன்படி ஆகஸ்ட் 23ஆம் தேதியான இன்று மாலை 4 மற்றும் 6 மணி அளவில் 2 போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது.
இதில் 4 பேர் விளையாடக்கூடிய squad டீம் மட்டுமே விளையாட முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பரிசுத் தொகையாக 5000 முதல் 20,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க விரும்புவோர் www.gamingmonk.com என்ற இணையதளத்தில் சென்று signup செய்த பின் பங்கேற்று கொள்ளலாம்.