பஜ்ஜி கேமை இந்தியாவில் தடை செய்து அதற்கான பின்னணி குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
உலகம் முழுவதும் அதிக நபர்கள் விளையாடக்கூடிய ஒரு வீடியோ கேமாக பப்ஜி இருக்கிறது. இந்தப் pubg க்கு பலரும் அடிமையாகி உள்ளனர். இதற்கு ஒருமுறை அடிமையாகி விட்டால், வேறு எந்த வேலையும் செய்ய தோணாது. மொபைலில் சார்ஜ் தீரும் வரை விளையாடிவிட்டு, சார்ஜ் போடும் நேரம் மட்டுமே இதைவிட விளையாடாமல் சும்மா இருக்க முடியும் என்கின்றனர் இதை விளையாடுபவர்கள். தற்போது இந்தியாவில் இந்த விளையாட்டை மத்திய அரசு தடை செய்துள்ளது.
இந்தியாவில் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் விளையாடும் ஆன்லைன் கேம் ஆன pubgயால் சிறுவர்கள், இளைஞர்கள் என பலரும் மன அழுத்தத்திற்கு ஆளாவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் தொடர்ந்து விளையாடியதால், சிலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிர் இழந்து உள்ளனர். அதேபோல் இதில் ஆடைகள், விதவிதமான துப்பாக்கிகள் வாங்குவதற்காக தனது தாய், தந்தையரின் பணத்தை அவர்களுக்கே தெரியாமல் எடுத்து சிறுவர்களும், இளைஞர்களும் செலவு செய்து சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டு உள்ளனர்.
அதேபோல், இதில் விளையாடும் இளைஞர்கள் ரத்தம் தெறிக்க தெறிக்க எதிரியை கொள்வது என்பது உள்ளிட்ட காட்சிகள் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக இருப்பதால் இந்த pubg யை தடை செய்ததற்கான முக்கிய காரணமாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும் இந்தியாவில் சீன ராணுவ தாக்குதலை தொடர்ந்து இந்த pubg செயலி உட்பட 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.