Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பொது அறிவிப்பு – அரசு முக்கிய செய்தி ….!!

தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்கள் இருந்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரசாங்கம் இவர்களுக்கு உதவி செய்வதற்கென்று தனியாக நிதி ஒதுக்கியும் வருகிறது. அந்த வகையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு அரசு சார்பில் வெளியிட்டபட்டுள்ளது.

அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டு வரும் பதிவு பெறாத தொழிலாளர்கள், தமிழக அரசின் நல வாரியங்களில் புதிதாக பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து, உதவித்தொகை வழங்கப்படும். அமைப்புசாரா தொழிலாளர்கள் http://labour.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என கூறியுள்ளது.

Categories

Tech |