தேர்தல் முடிந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வேகமாக உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.
தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.
இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 14 பைசா அதிகரித்து 74 ரூபாய் 39 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. அதே போல் ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையிலிருந்து 08 பைசா அதிகரித்து 70 ரூபாய் 45காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. தேர்தல் முடிந்த நாள் முதல் விலை கிடுகிடுவென உயர்வதால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.