அரும்பாக்கம் உள்ளிட்ட 6 ஊராட்சிகளை திருக்கோவிலூர் நகராட்சியில் இணைப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மேளதாளனூர், கனகநந்தல், கீரனூர், கீழ் தாழனூர், அரும்பாக்கம் உள்ளிட்ட 6 ஊராட்சிகளை புதியதாக உருவாக்கப்பட உள்ள திருக்கோவிலூர் நகராட்சியுடன் இணைப்பதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாவட்ட ஆட்சி அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அரும்பாக்கம், கனகநந்தல் ஊராட்சிகள் விவசாயத்தை பெரிதும் நம்பி உள்ளதாகவும் இதனால் ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்க வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.