மகாராஷ்டிராவில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது மகாராஷ்டிரா மாநிலம் தான். ஆகவே இன்றோடு ஊரடங்கு முடியவுள்ள நிலையில் மேலும் ஊரடங்கை நீடித்து மே 31ம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று மகாராஷ்டிர மாநில அரசு தெரிவித்திருக்கின்றது. மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் மிக அதிகமாக இருக்கிறது. ஒரு வேளை ஊரடங்கு தளர்த்தப்பட்டால் அது கொரோனா பரவல் அதிகரிக்க வழிவகுக்கும் என்பதால் மகராஷ்டிரா மாநிலம் இத முடிவை எடுத்துள்ளது.
மகாராஷ்டிராவில் அதிகமாக சிவப்புப் பகுதி அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் இருக்கின்றன. ஆகவே அந்த பகுதிகளில் எந்தவிதமான தளர்வுகளும் இருக்கக்கூடாது, அப்படி இருந்தால்தான் கொரோனா வைரஸை கட்டுக்குக் கொண்டு வர முடியும். அந்த பகுதிகளில் மேலும் புதிய கட்டுப்பாடுகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் மகாராஷ்டிரா அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அங்கு 30,706 பேருக்கு கொரோனா ஏற்பட்டதில் 7,088 பேர் குணமடைந்து, 1,135 பேர் உயிரிழந்துள்ளனர்.