பொது நூலகங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து நூலக இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நான்காம் கட்ட ஊரடங்கு இன்று முதல் தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு கொடுத்துள்ளது. அந்த வகையில் பொதுப் போக்குவரத்து, வழிபாட்டுத்தலங்கள், பூங்காக்கள், பொது நூலகங்கள் போன்றவற்றிற்கு ஏற்கனவே இருந்த தடை நீக்கப்பட்டு செயல்பட தொடங்கியுள்ளன. இந்நிலையில் நூலகங்கள் செயல்படும் நேரம் மற்றும் அங்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து நூலக இயக்கம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில் நூலகங்களில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை வாசகர்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்றும் நூலகத்திற்குள் நுழையும் அனைவரும் முகக் கவசம் தனிநபர் இடைவெளி போன்றவற்றை பின்பற்ற வேண்டும்.
மேலும் உள்ளே நுழையும் பொழுது அனைவருக்கும் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள மண்டலங்களில் செயல்பட்டு வரும் நூலகங்கள் திறக்க அனுமதி கிடையாது. மேலும் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் போன்றவர்களை நூலகத்திற்குள் அனுமதிக்க முடியாது என்றும் நூலக இயக்கம் தெரிவித்துள்ளது.