Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு இடத்தை ஒதுக்கி கொடுங்க… இல்லைனா ஓட்டு போட மாட்டோம்… எதிர்ப்பை தெரிவித்த மக்கள்…!!

சுடுகாட்டிற்கு தனி இடம் ஒதுக்கி தராததால் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள செங்கலத்துப்பாடி கிராமத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த கிராமத்தில் சுடுகாடிற்கு இடம் தனியாக இல்லை. அதனால் இந்த கிராமத்தில் உயிரிழப்புகள் நேரிடும் போது அவர்களை புதைப்பதற்கு கிராமமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

எனவே இதுகுறித்து கிராமமக்கள் மேல் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்களுடைய எதிர்ப்பை அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |