குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பாலக்கரை கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு பழமலைநாதர் நகரில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தினமும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக குழாய்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக அப்பகுதியில் உள்ள மக்களுக்கு சரிவர குடிநீர் வருவதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் காவல்துறையினர் உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.