Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எவ்வளவு நாளா சொல்லுறோம்… உடனே நடவடிக்கை எடுங்க… மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!

குறைந்த அழுத்த மின்சாரத்தை சீரமைத்து தர கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டத்திலுள்ள நாகமங்கலம் கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுடைய வீடுகளில் கடந்த இரண்டு மாதங்களாக குறைந்த அழுத்த மின்சாரத்தால் டிவி, மின்விசிறி, மின்மோட்டார், குளிர்சாதனப் பெட்டி, மிக்சி, கிரைண்டர் போன்ற மின்சாதன பொருட்கள் சரியாக இயங்கவில்லை. இதனால் மின்சாதன பொருட்கள் பழுதடைந்து போகின்றது. மேலும் குடிநீரும் சரியாக விநியோகிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |