தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வுகளை ஆன்லைனில் நடத்தலாம் என பள்ளிக் கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 9 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையில், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மூலம் கல்வி கற்பித்து வருகின்றனர். இந்நிலையில், கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” தனியார் பள்ளிள் ஆன்லைனில் அரையாண்டு தேர்வை நடத்தலாம்.
அதற்கு ஆட்சேபம் இல்லை. அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வை தமிழக அரசு ஒத்திவைத்துள்ளது. பொதுத் தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு கூட பள்ளிகளை திறக்க முடியாத சூழல் தற்போது நிலவுகிறது. பள்ளிகளை திறக்க அரசு திட்டமிட்டாலும் அதற்கு பெற்றோர்கள் தரப்பில் எதிர்ப்புகள் கிளம்புவதால் பள்ளிகள் திறப்பு கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. அதனால் மாணவர்களுக்கான பாடங்கள், தேர்வுகள் என அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெறுகிறது. எனவே, தனியார் பள்ளிகள் ஆன்லைனில் அரையாண்டு தேர்வுகள் நடத்தலாம் என அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.