தமிழகத்தில் சமீபத்தில் மின்சார கட்டணமாக உயர்த்தப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார். அதன் பிறகு 100 யூனிட் வரை இலவச மின்சாரமும், 500 யூனிட் வரை மானிய கட்டணத்தில் மின்சார கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. அதன் பிறகு அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு நடைபாதை விளக்கு, மோட்டார் பம்ப், லிஃப்ட் போன்றவைகளுக்கு மொத்தமாக சேர்த்து பொது பிரிவில் மின் கட்டணமானது வசூலிக்கப்படும். இவைகளுக்கு தனி வீடுகளிலும் பொது பிரிவுகளில் மின் கட்டணம் வசூலிக்கப்படும். இந்நிலையில் பொது பிரிவு மின் கட்டணம் முறையில் அரசாங்கம் மாற்றம் செய்துள்ளது.
இதற்கான புதிய கட்டணத்தை வசூலிக்குமாறு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தங்களுக்கு வந்திருக்கும் பொது மின் கட்டணத்தை பார்த்து மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். அதாவது இதற்கு முன்பாக 400 யூனிட்டுக்கு கீழ் 1000 ரூபாய் மின்கட்டணம் செலுத்தப்பட்டதாகவும், தற்போது 3800 ரூபாய் வரை மின் கட்டணம் செலுத்தப்படுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் கட்டணத்தை அனைவரும் பிரித்து வழங்கினாலும் தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் மிகவும் அதிகமான தொகையாகவே இருப்பதால் மின்வாரியமானது கட்டணத்தை குறைப்பதற்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.