Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நீங்கள் வாக்களிக்க கூடாது…. திடீரென வெளிவந்த தகவல்…. அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்….!!

தங்களையும் வாக்களிக்க அனுமதிக்குமாறு ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சிக்கம்பட்டி மற்றும் குன்றத்தூர் போன்ற கிராமங்களில் இருக்கும் 6 வார்டுகளில் வசிக்கின்ற மக்கள் வாக்களிக்க இருந்துள்ளனர். ஆனால் தற்போது 4 வார்டுகளில் வசிப்பவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் எனவும் மீதமுள்ள 2 வார்டுகளில் வசிக்கும் மக்கள் கிளியூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வாக்களிக்க வழிவகை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் 100-க்கும் அதிகமானோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அங்கிருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பன்னீர் செல்வம் என்பவரை சந்தித்து ஏற்கனவே இருந்த முறைப்படி 6-வார்டு மக்களையும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டுமெனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதில் அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் வாக்குவாதத்தில் எந்த விதமான மாற்றமும் இல்லை என கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஏற்கனவே உள்ள முறைப்படி தான் தேர்தல் நடைபெறும் என உறுதியளித்துள்ளார். இதனால் கிராம மக்கள் அங்கிருந்து முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர். மேலும் அலுவலகத்தின் முன்பாக கிராம மக்கள் முற்றுகை இட்டதால் சிறிது நேரம் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டுள்ளது.

Categories

Tech |