தமிழகத்தில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மத்திய அரசின் அறிவிப்பின் அடிப்படையில் ஜூன் 30 நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 5ம் கட்ட ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நாளை முதல் பொது போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்ட மண்டலங்களில் இருந்து 50% பேருந்துகள் மட்டும் இயங்கும். பேருந்துகளில் உள்ள மொத்த இருக்கைகளில் 60% இருக்கைகளில் மட்டும் பணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி வழங்கப்படும்.
ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு பயணம் செய்ய இ-பாஸ் தேவை இல்லை என்றும் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் தனியார் பேருந்துகளும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பொது போக்குவரத்து தடை நீட்டிக்கும் என முதல்வர் அறிவித்துள்ளார். 8 மண்டலங்களின் விவரம்.,
முதல் மண்டலம்: கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கரூர், சேலம், நாமக்கல்
2ம் மண்டலம்: தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி
3ம் மண்டலம்: விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி
4ம் மண்டலம் :நாகை , திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை.
5ம் மண்டலம் : திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்
6ம் மண்டலம் : தூத்துக்குடி, திருநெல்வேலி, குமரி மற்றும் தென்காசி
7ம் மண்டலம் : காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்
8ம் மண்டலம் : சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதி.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்கள், அரசு ஊழியர்கள் செல்ல மட்டும் பேருந்துகள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.