Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

மருத்துவ படிப்பு கலந்தாய்வு தரவரிசை பட்டியல் வெளியீடு ….!!

மருத்துவ கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வின் முடிவு ஜூன் 5_ஆம் தேதி வெளியாகிய நிலையில் தமிழக அரசு மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பங்களை ஜூன் 7_ஆம் தேதி முதல் 20_ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தது.மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப கடந்த மாதம் 22_ஆம் தேதி வரை காலநீட்டிப்பு செய்திருந்தது.

Image result for மருத்துவ படிப்பு கலந்தாய்வு

இந்நிலையில் இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார். மொத்தமுள்ள மருத்துவ படிப்பு இடங்களுக்கு 68,020 பேர் விண்ணப்பித்திருந்ததில் தமிழகளவில் நீட் தேர்வில் முதலிடம் பெற்ற  திருவள்ளூர் மாணவி ஸ்ருதி முதலிடம்  பிடித்தார்.8_ஆம் தேதி சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் , 9_ஆம் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வும் நடைபெற இருக்கின்றது.

Categories

Tech |