Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு…!!

சென்னையில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார்.

நீட் தேர்வு முடிவானது   ஜூன் 5 ஆம் தேதி வெளியான நிலையில், மருத்துவ படிப்புகளில் பயில விரும்புவோர்  விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்  என தமிழக அரசு அறிவித்தன்படி, கடந்த 7 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்களை  பதிவு செய்யுமாறு  அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

Image result for health minister vijayabaskar

 

மாணவர்கள் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களுடன் சேர்த்து,  தங்களது  சான்றிதழ் நகலை இணைத்து அனுப்ப ஜூன்  22 ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டது. மருத்துவ படிப்பிற்கு  மொத்தம் 68,020 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் விண்ணப்பங்களில் இருந்து சரிபார்க்கப்பட்ட மருத்துவ படிப்புக்கான  தரவரிசை பட்டியலை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் இன்று காலை வெளியிட்டார்.

Image result for மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல்

தரவரிசை பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து  ஜூன்  8 ஆம் தேதி  சிறப்பு பிரிவு  மாணவர்களுக்கும்,ஜூன் 9 ஆம் தேதி  பொதுப்பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு கூட்டம்  தொடங்க இருக்கிறது.இந்த தரவரிசை பட்டியலில் மாணவி ஸ்ருதி முதலிடம் பெற்றுள்ளார்,மேலும் இவர் நீட் தேர்விலும் தமிழக அளவில் முதலிடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |