பிரபல நடிகை ஒருவர் புடவை கட்டிக்கொண்டு புல்லட் ஒட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .
தமிழ் திரையுலகில் நடிகை பிரகதி கடந்த 1994ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி நடித்த ‘வீட்ல விசேஷங்க’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் . இதைத்தொடர்ந்து இவர் பெரிய மருது, சிலம்பாட்டம் ,மார்க்கண்டேயன் ,எத்தன், சித்து பிளஸ் டூ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் .
தற்போது இவர் அரண்மனைக்கிளி என்ற சீரியலில் ஹீரோவுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை பிரகதி புடவை கட்டிக்கொண்டு அசத்தலாக புல்லட் ஓட்டிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்து ஆச்சரியமடைந்த ரசிகர்கள் அவரைப் பாராட்டியதோடு இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.