Categories
சினிமா தமிழ் சினிமா

புடவையில் விஜய் டிவி டிடி வெளியிட்ட புகைப்படம்… ட்விட்டரில் சொன்ன சூப்பர் தகவல்… என்ன தெரியுமா ?…!!!

விஜய் டிவியின் தொகுப்பாளினி டிடி டுவிட்டரில் சூப்பரான தகவலை வெளியிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியின் செல்லப்பிள்ளை என அழைக்கப்படுபவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி . இவரை அனைவரும் செல்லமாக டிடி என அழைப்பர் ‌ . இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார் . இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. சினிமாவில் இருக்கும் நடிகைகள் கூட பொறாமைப்படும் அளவிற்கு உயரத்தை அடைந்தவர் டிடி. மேலும் இவர் சர்வம் தாளமயம், சரோஜா ,கோவா ,பவர் பாண்டி உள்ளிட்ட சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். தற்போது இவர் துருவ நட்சத்திரம் என்ற படத்தில் நடித்து வருகிறார் .

சமூக வலைத்தளங்களில் டிடி வெளியிடும் புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் குவியும் . இந்நிலையில் பொங்கல் ஸ்பெஷலாக நீலப் புடவையில் டிடி வெளியிட்டுள்ள அசத்தலான புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்துள்ளது. மேலும் இவர்  சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த சூப்பரான தகவலை கேட்ட அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |