Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பூட்டி விட்டு சென்றவருக்கு… காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

பல்பொருள் அங்காடியில் பொருள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் முகமது முஸம்மில் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் சொந்தமாக பல்பொருள் கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவர் தனது கடையின் வியாபாரத்தை முடித்து பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் முகமது முஸம்மில் அதிகாலையில்  அவ்வழியாக சென்ற போது தனது கடையின் பூட்டு மற்றும் ஷட்டரை கடப்பாரையால் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது முகமது முஸம்மில் கடையில் வைத்திருந்த 4,000 ரூபாய் பணம் மற்றும் சில  வெளிநாட்டு பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து முகமது முஸம்மில் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பணம் மற்றும் பொருட்களை திருடி தப்பி சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |