Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பூட்டிட்டு தான் போனோம்… ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!!

மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருட முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் ஊழியர்கள் வேலையை முடித்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனை அறிந்த மர்ம நபர்கள் அந்த டாஸ்மாக் கடையின் பின் பகுதியில் அமைந்துள்ள கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து அங்கிருக்கும் மதுபாட்டில்களை திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் மதுபாட்டில்கள் வைத்திருக்கும் அறையின் பூட்டை உடைக்க முடியாமல் அங்கிருந்து சென்று விட்டனர்.

இதனையடுத்து காலையில் டாஸ்மாக் கடையின் ஊழியர்கள் கடையை திறந்து பார்த்தபோது அங்கு பின்பகுதியில் உள்ள கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல் துறையினருக்கு  தகவல் கொடுத்துள்ளனர்.  அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கடையை சோதனை செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இதுபோல் அடிக்கடி டாஸ்மார்க் கடையில் மது பாட்டில்களை திருட முயற்சி செய்யும் மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |