Categories
உலக செய்திகள்

“வோல்ட்ரோ மோட்டார்ஸின் புதிய மின்சார சைக்கிள்”… எந்த பிரச்னையும் இருக்காது… சுலபமா 100 கி.மீ வரை போகலாம்…!!!

வோல்டரோ மோட்டர்ஸ் என்ற  மிதிவண்டி  தயாரிக்கும் நிறுவனம் தற்போது புதிதாக ஒரு மின்சார மிதிவண்டியை  அன்றாட பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மின்சார மிதிவண்டி பள்ளி செல்லும் மாணவ- மாணவியருக்கு ஏற்றவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று வோல்டரோ மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. இதுகுறித்து, வோல்டோ மோட்டார்ஸின்  தலைமைச் செயலாளர் பிரசாந்தா கூறும்போது,”  இந்த மின்சார மிதிவண்டியை தயாரிப்பதற்கு முன்பு  நாங்கள் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வாகனங்களுக்கு ஏன்  சரியான வரவேற்பு கிடைப்பதில்லை என்பது குறித்து பொது மக்களிடம் என்று ஆராய்ச்சி மேற்கொண்டோம்.

ஆராய்ச்சியின் முடிவில் மின்சார மிதிவண்டிகள் பொதுவாக 25ல் இருந்து 35 கிலோமீட்டர் வரை மட்டுமே செல்லும் தன்மையாலயே அதற்கு சரியான வரவேற்பு கிடைப்பதில்லை என்பதை நாங்கள் அறிந்தோம். எனவே நாங்கள் மிதிவண்டியின்  பயண தூரத்தை அதிகரிக்க விரும்பி, 100 கிலோமீட்டர் வரை  எந்த வித பிரச்சனையுமின்றி சுலபமாக பயணம் செய்யக்கூடிய ஒரு புதிய மின்சார மிதிவண்டியை அறிமுகப்படுத்தி உள்ளோம்” என்று கூறியுள்ளார். சாதாரணமான ஒரு மின்சார மிதிவண்டியில் ஒருவர் மட்டுமே பயணம் செய்ய முடியும். ஆனால் வோல்ட்ரோ  மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான மின்சார மிதிவண்டியில் இரண்டு பேர் பயணிக்கலாம் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |