Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திருமணமான 6 மாதத்தில்…. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. மனைவியின் பரபரப்பு புகார்….!!

புதுமாப்பிள்ளை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவருக்கும் பிரியதர்ஷினி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு கணவன் – மனைவிக்கு  இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மன அழுத்தத்தில் இருந்த பாலகிருஷ்ணன் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலகிருஷ்ணனின் சடலத்தை கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து பிரியதர்ஷினி திருவையாறு காவல் நிலையத்தில்  இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருவையாறு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |