Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“டம்பளர் திருடிய காவலர் பணியிடைமாற்றம்” காவல் கண்காணிப்பாளர் அதிரடி…!!

அறந்தாங்கி அருகே தண்ணீர் டம்ளரை திருடியதற்காக காவலர்  பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி  அடுத்துள்ள மேற்பனைக்காடுபேட்ட பகுதியில்  தண்ணீர் பந்தல் வைக்கப்பட்டுள்ளது. இப்பந்தலில் வைக்கப்பட்ட  தண்ணீர் டம்ளர்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக காணாமல் போகி உள்ளது. இதைத்தொடர்ந்து  அப்பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது.இந்த நிலையில் கடந்த சனி கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் இரண்டு காவலர்கள்  தண்ணீர் டம்ளரை திருடிச் செல்லும் காட்சி அந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. 

இதையடுத்து தகவல் அறிந்த காவல் கண்காணிப்பாளர் தண்ணீர் டம்ளரை திருடிய காவலர் அய்யப்பனை ஆயுதப்படைக்கு பணியிடை மாற்றம் செய்ப்படுவதாக அதிரடி  உத்தரவிட்டார்  மேலும் வாகனத்தை ஓட்டி சென்றவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் சக காவலர்களிடம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.   

Categories

Tech |