புதிதாக வீடு வாங்க போகிறவர்களுக்கு அரசு குறிப்பிட்ட சலுகையை அறிவித்துள்ளது.
புதிதாக வீடு வாங்குவது என்றால் ஒரு சதவீதம் பத்திரப்பதிவு, 7 சதவீதம் வரை முத்திரைத்தாள் கட்டணம் என பல செலவுகள் இருக்கும். இந்த செலவில் 50% சதவீத சலுகை வழங்கினால் எப்படி இருக்கும். எப்போதுமே நம்முடைய கனவு சொந்த வீடு தான். ஆனால் சொந்த வீடு வாங்குவது அவ்வளவு எளிதல்ல. வீடு வாங்குவதற்கும் அதை பத்திரம் செய்வதற்கும் ஆகும் செலவு நமக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். அதில் குறிப்பாக கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் பல முக்கிய நகரங்களில் ரியல் எஸ்டேட் துறை கடுமையாக பாதிப்படைந்து.
மும்பை, டெல்லி, சென்னை போன்ற நகரங்களில் கட்டிய வீடுகளை விற்க முடியாமல் கடும் இழப்பை சந்தித்து வருகின்றனர். வீடுகளின் விற்பனை அதுமட்டுமில்லாமல் வீடுகளின் தவணையை கட்ட முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் புதிய வீடு வாங்குபவர்களுக்கு முத்திரைத்தாள் கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் வரை விலக்கு அளிக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.
மகாராஷ்டிரா அமைச்சரவை இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கட்டண விலக்கு இந்த ஆண்டு டிசம்பர் வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சியை ஊக்கப்படுத்த இது நல்ல ஆலோசனையாக முடிவு செய்துள்ளது. வீடுகளில் குடியேறும் சான்றிதழ் அளிக்கும் பட்சத்தில் முத்திரை மட்டும் பதிவு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.