Categories
தேசிய செய்திகள்

சிறிதும் சமூக இடைவெளி இல்லை… புதுச்சேரி பெரிய மார்க்கெட்டை மூட ஆட்சியர் உத்தரவு…!!

புதுச்சேரி நேரு வீதி பெரிய மார்க்கெட்டை வரும் 17ம் தேதிக்குள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

வியாபாரிகளும், பொதுமக்களும் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் மார்க்கெட்டை மூட உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. 17ம் தேதிக்கு பிறகு ஏ.எப்.டி திடலில் காய்கறி கடைகள் செய்லபடும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் இன்று புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 193 ஆக அதிகரித்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் நேற்று வரை 176 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 92 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், அரும்பார்த்தபுரத்தை தற்காலிக முகவரியாக தெரிவித்திருந்த விழுப்புரம் மாவட்டம் குமளம் பகுதி, முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு மேலும் ஒரு டயாலிசிஸ் நோயாளி உயிரிழந்துள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு மேலும் ஒரு டயாலிசிஸ் நோயாளி உயிரிழந்துள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |