நாளை முதல் புதுச்சேரி மாநில எல்லை மூடப்படுமென்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய மாநில அரசுக்கள் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. முன்பாக மார்ச் 31 வரை புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுச்சேரி மாநில எல்லைகள் மூடப்படுவதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் நாராயணசாமி கூறுகையில் , புதுச்சேரி மாநிலத்திற்கு வட மாநிலம் , வெளிநாட்தில் இருந்து சுற்றுலாவுக்கு அதிகமான பயணிகள் வருவார்கள். இதனால் கொரோனா நோயின் தாக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் நாளை முதல் மார்ச் 31ஆம் தேதி வரை வெளிமாநில வாகனங்கள் மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்படும். அத்தியாவசிய பொருட்கள் காய்கறி , பால் ஆகிய வாகனகளுக்கு மட்டும் அனுமதி கொடுத்து மாநில எல்லையை மூட உத்தரவிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.