Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டம்: பிரான்ஸ் தூதருடன் முதல்வர் ஆலோசனை…!!

ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக பிரான்ஸ் தூதருடன் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

புதுச்சேரியில் பிரான்ஸ் தூதர் இமானுவேல் லெனைன், பிரஞ்ச் கவுன்செல் ஜெனரல் கேத்தரின் சுவார்ட் ஆகியோர் நேற்று சட்டப்பேரவை அலுவலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்தனர். அப்போது, புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், குறிப்பாக மாசு இல்லாத போக்குவரத்து உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

Image

இதையடுத்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் வழங்குவதற்கு புதுச்சேரி அரசு கடந்த 2016ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது மறுபடியும் அந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன்பின், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட திட்டங்களுக்கும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

Puducherry Chief Minister
இந்த திட்டம் முதல் கட்ட ஆய்வில் உள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது தலைமை செயலர் அஸ்வினி குமார், அலுவலர்கள் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |