கொரோனா தொற்றுக்குள்ளான புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் என் ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவி ஏற்றுக் கொண்டார். பதவியேற்ற இரண்டு நாட்களிலேயே அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள எம்.ஜி.எம்.தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் உடல்நிலை குறித்து சிகிச்சை பெறும் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெ உன்னுடைய சாப்பிடுவாளியிடப்பட்டுள்ளது. அதில், “புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்ந்தார். அவருக்கு சிகிச்சை மற்றும் உடலுக்குதேவையான ஆக்சிஜன் அளவு சீராக பராமரிக்கப்படுகிறது. இதையடுத்து அவருடைய உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவமனை குழுவினர் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர். என தெரிவிக்கப்பட்டுள்ளது.