Categories
அரசியல் மாநில செய்திகள்

“புதுச்சேரி திராவிட மாடல் ஆட்சியின் தலைநகரம்”…. விரைவில் ஆட்சி மாறும்?…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!

புதுச்சேரியில் நடைபெற்ற திமுக கட்சியின் அவைத்தலைவர் எஸ்.பி சிவகுமாரின் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, புதுச்சேரி மீது எனக்கு எப்போதும் தனி பாசம் உண்டு. ஏனெனில் கருணாநிதி கொள்கை வரம் பெற்ற ஊர் புதுச்சேரி. எனவே புதுச்சேரி மற்றும் தமிழகத்தை யாராலும் பிரித்து பார்க்க முடியாது. புதுச்சேரியை திராவிட இயக்கத்தின் தலைநகர் என்று சொல்லலாம். அதன் பிறகு புதுச்சேரியில் ஆளுநர் ஆட்டிப் படைக்கும் ஆட்சி தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

எனவே புதுச்சேரியிலும் தற்போது திராவிட மாடல் ஆட்சி தான் தேவைப்படுகிறது. தேர்தல் சமயத்தில் கூட்டணி அமைப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். இங்கு மதவாத ஆட்சி நடைபெறக் கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். மேலும் தற்போது புதுச்சேரியில் பொம்மை ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனவும், மக்களுக்காக ஆட்சி நடைபெறவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.

Categories

Tech |