புதுச்சேரியில் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கை மே 31-ஆம் தேதி வரை நீடிப்பதாக அம்மாநில கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி போன்ற மாநிலங்களில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு புதுச்சேரியிலும் கடந்த 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் 31-ஆம் தேதி வரை தளங்களுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்க படுவதாக அம்மாநில துணை கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் உத்தரவிட்டார்.
இதன்படி காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், கடைகள் திறந்திருக்கும் எனவும், பொதுமக்கள் தங்கள் வீட்டின் அருகிலுள்ள கடைகளுக்கு சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும், அதிக தூரம் சென்று கடைகளில் பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.